Did you know? why we offering porridge to Goddess Kaveri?

ஆடிச்சிறப்பு

பூமாதேவி அவதரித்த மாதமாக ஆடிமாதம் கருதப்படுகிறது.ஆடிமாதம் அன்று கிராமப்புற கோவில்களில் கூழ் ஊற்றுவதும் கிராமதெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடு நடத்துவதும் வழக்கம். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சூரியன் தன் கதிர் வீச்சுகளை மாற்றும். சூரிய கதிர்கள் திசை ஆடி மாதத்தில் தான் மாறுகிறது.

நம் நாட்டை பொறுத்தவரை  ஈரப்பதம் நிறைந்த குளிர்காலம், உஷ்ணம் நிறைந்த கோடைகாலமாக மாறுகிறது. இக்காலத்தி அறிவியல் செய்தியின் படி வைரஸ் போன்ற கிருமிகளால் ஏற்படும் வியாதிகள் அதிகம்.

Koozh_Ootthal

ஆடி மாதத்தில் சின்ன அம்மை மற்றும்  தட்டம்மை அதிகமாக பரவும். இவ்விதமான நோய்களை தடுப்பதற்காகவே கேழ்வரகு கூழ் ஊற்றும் நிலையை கொண்டுவந்தனர்.

கேழ்வரகு கூழ் பருகினால் உடலுக்கு குளுர்ச்சி அளிக்கும். இரும்பு ,கால்சியம் , நார்ச்சத்து மற்றும் அம்மைகளில் இருந்தும்,உஷ்ணத்தில் இருந்து நம்மை காக்க மாரியம்மனை வணங்கி கூழ் ஊற்றுவதற்க்கு காரணம் ஆகும்.

நோய் பரவாமல் தடுப்பதற்காக கூழ் பானையினை சுற்றி மஞ்சள் மற்றும் வேப்பிலையை கட்டுவார்கள் இது ஒரு கிருமிநாசினி ஆகும். இதன் மூலம் நம் முன்னோர்களின் பழக்கங்கள் கண்மூடித்தனமானவை அல்ல என்பதை உணரமுடிகிறது.

18-ஆம் நாள் ஆடிமாதத்தில் ஆடிப்பெருக்கு கொண்டாடுவதற்கு ஒரு ஐதீகம் உண்டு.

5181868759ddec27da7e5e298d2f8439--shiva-shakti-indian-gods

ஆடிமாதத்தில் காவேரி ஆற்றில் தண்ணீர் பிரவாகமாக காட்சி  தரும். ஐதீகப்படி 18 -ஆம் நாள் ஆடிமாதத்தில் காவேரி அம்மன் மசக்கை கொண்டிருப்பதால் சித்ரான்னங்கள் தயாரித்து நெய்வேத்தியம் செய்யப்படும். அன்று காவேரி அம்மனுக்கு கருகமணி, காதோலை, மஞ்சள், குங்குமம், விளக்கு இவற்றை சமர்ப்பித்தால் செல்வச்செழிப்போடும் வாழ்க்கை ஆரோக்கியமாகவும் அமையும் என்பது நம்பிக்கை.

By

Reach us to be a part of our whatsapp spiritual reminder group

About the author

View all articles by Bhuvana

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP