Did You know? Even lord Shiva was tormented by Lord Saturn’s.சிவபெருமானையே பிடித்த சனியின் கதை

சிவபெருமானையே பிடித்த சனியின் கதை

சனிபகவான் பிடியிலிருந்து இவ்வுலகத்தில் வாழும் அனைத்து மக்களும் தப்பிக்க முடியாது என்பது உலகறிந்த உண்மை அந்த வகையில் இறைவன் மட்டும் விதிவிலக்கா என்ன? சனிபகவான் சிவபெருமானை பிடித்ததை பற்றி கீழ்வரும்  கதையில் காண்போம்.

Lord-Shiva-and-Shani-Dev-Relationship_ShriHub-1132x509 (1)

தேவலோகத்தை நோக்கி சனிபகவான் விரைந்து வருவதைக்கண்ட தேவர்கள் பயத்தில் நடுங்கி இன்று யாறைபிடிக்கப் போகிறாரோ என்று அனைவரும் ஓடி ஒளிந்து கொள்கின்றனர்.  ஆனால் சனிபகவானோ  தேவலோகத்தைக்  கடந்து செல்வதைக்கண்டு தேவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

sd

தேவர்கள் வெளியேவந்து சனியை பின்தொடர்ந்து எங்கு செல்கிறார் என்பதை அறிவதற்கு முயற்சித்தனர். சனியோ கைலாயத்தைநோக்கி விரைந்து வருவதைக்கண்ட சிவபெருமான் தன்னை பிடிப்பதற்காகத்தான் வருகிறார் என ஊகித்து தப்பிப்பதற்க்கான இடத்தை தேடுகிறார்.

lord shiva animated images

திருமால் அவருக்கு வழிகாட்ட சிவன் ஒரு குகையில் ஒளிந்துகொள்கிறார். பின்பு அவர் தியானத்தில் அமர்ந்துவிடுகிறார். சில வருடங்களாக அவர் தியானத்திலேயே இருக்கிறார்.  பின்பு  ஒருநாள் குகையில் இருந்து சிவபெருமான் வெளிவரும் நாள் வரை சனிபகவான் குகையின் அருகிலேயே காத்திருக்கிறார். சிவபெருமான் சிரித்துக்கொண்டே காலம் கடந்து விட்டது நான் உன் பிடியில் இருந்து தப்பித்து விட்டேன் என்றரர். சனியோ சுவாமி நான் உங்களை பிடித்ததாலே  நீங்கள் ஏழரை வருடங்களாக பார்வதிதேவியைக்கூட பார்க்க முடுயாமல் இந்த குகையிலேயே  இருந்தீர்கள் என்றார்.

2017_1image_12_08_042158227shivshanistory-ll

சிவபெருமான் சனிகூறுவதைக்கேட்டு வியந்து, இறைவன் என்றும் பாராமல் நீ உன் கடமையை சரிவர செய்ததால் ஈஸ்வரன் என்னும் என்னுடைய பெயரை உனக்கு பட்டமாக அளிக்கிறேன்.  இன்று முதல் உன்னை அனைவரும் சனீஸ்வரர் என்று அழைப்பர் என்று வாழ்த்தினார்.

By

Reach us to be a part of our whatsapp spiritual reminder group

About the author

View all articles by Bhuvana

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP