Why do we offer food as prasadam to God? ஏன் நாம் உணவை இறைவனுக்கு பிரசாதமாக படைக்கின்றோம்?

முன்பொருகாலத்தில் முனிவர் ஒருவர் ஒரு நாட்டின் அரசரை சந்திக்க சென்றார்அம்முனிவரை அன்போடு வரவேற்ற அரசர் அவருக்கு வேண்டிய பணிவிடைகளை செய்து, அவரை உணவு உண்ண அழைத்தார். முதலில் உண்ண மறுத்த முனிவர் மன்னரின் வற்புறுத்தலால் உணவு உண்ண சம்மதித்தார். முனிவருக்கென தனி ஆட்களை நியமித்து, உணவுகளை தயார் செய்ய ஆணையிட்டார் அரசர்அரசரின் அன்பான உபசரிப்பால் உணவுகள் அனைத்தையும் உண்டு முடித்த முனிவர், உண்ணட களைப்பால் உறங்கிவிட்டார்சிறிது நேரம் கழித்து, கண்விழித்த முனிவர் தான் தங்கியிருந்த அறையின் சுவற்றில் ஒரு முத்துமாலை தொங்கிக்கொண்டு இருப்பதைக் கண்டார்அவர் உண்ட உணவின் தாக்கத்தாலோ என்னவோ, அவரின் மனதில் தவறான எண்ணங்கள் எழத்தொடங்கினஅம்முத்துமாலையை தன்வசமாக்க எண்ணி அதை தனது வஸ்திரத்தில் முடிந்து வைத்துக் கொண்டார்.

sage

சிறிது நேரம் கழித்துஅரசரை சந்தித்து தனக்கு செய்த பணிவிடைகளுக்கு நன்றி கூறிவிட்டு, தனது ஆசிரமத்திற்குச் சென்றுவிட்டார்அவர் சென்ற பிறகு காவலாளி ஒருவன் முத்துமாலை காணாமல் போன செய்தியை அரசரிடம் கூறினான்முனிவரை தவிர அன்றய தினம் அரண்மனைக்கு வந்த மற்ற அனைவரையும் அழைத்து வந்து விசாரிக்க உத்தரவிட்டார் அரசர்அரண்மனைக்கு வந்து போன அப்பாவிகளுக்கெல்லாம் உதை விழுந்ததுஆனால்அவர்களோ ஒரேயடியாக மறுத்தனர்அரசருக்கு முனிவர் மீது துளியும் சந்தேகம் எழவில்லை.

அன்றிரவுமுனிவருக்கு கடும் வயிற்றுப்போக்குதான் தவறு செய்ததால் தான் தனக்கு உடல்நலம் சரியில்லாமல் போய்விட்டதென உணர்ந்தார் முனிவர்தான் செய்த தவற்றை எண்ணி வருந்திய முனிவர், அம்முத்துமாலையை அரசரிடம் சென்று ஒப்படைத்தார்முத்துமாலையை திருடியது தாம்தான் என ஓப்புக்கொண்டார்ஆனால் அரசருக்கு அவரது வார்த்தைகளில் நம்பிக்கை ஏற்படவில்லை. வேறுயாரையோ காப்பாற்ற முனிவர் பொய்ச்சொல்வதாக எண்ணினார்திருடியது நீங்கள்தான் எனில் அதற்கான காரணத்தை விளக்குமாறு முனிவரிடம் கேட்டார் அரசர்.

அரசேஎனக்காக சமைக்கப்பட்ட உணவை யார் தயார் செய்ததுமேலும் அதற்கு பயன்படுத்திய பொருட்கள் எந்த வழியில் வந்தன என கூறுங்கள் என்றார் முனிவர்.

அதற்கு அரசர்திருடன் ஒருவன் ஒரு அரிசிக் கடையை உடைத்து மூட்டையை தூக்கிச் சென்ற போதுபறிமுதல் செய்த அரிசி அது என்றார்திருடிய அரிசியை சாப்பிட்டதால்தான் தனக்கும் திருடும் எண்ணம் வந்துவிட்டதாக கூறினார் முனிவர்இதைக்கேட்ட அரசர்அப்படி ஒரு அரிசியை சமைக்க சொன்னதால் நான் தான் குற்றவாளி என கூறி முனிவரை அனுப்பிவிட்டார்.

உணவு பயிரிடப்படும் விதம்பயிரிடுபவர்சமைப்பவர் இவற்றைப் பொறுத்தே உணவின் தரம் அமையும்அதைச் சாப்பிடும் போதுஅந்த குணநலன்கள் மனிதன் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும்எனவே தான்இறைவனுக்கு உணவை படைத்து அதை பிரசாதமாக உண்கிறோம்பயிரிடும் போதும்சமைக்கும் போதும்சாப்பிடும் போதும் நல்லதையே நினைத்தால்நாம் உண்ணும் உணவே இறைவனின் அருள்பெற்ற பிரசாதம் ஆகிவிடும்.

By

Reach us to be a part of our whatsapp spiritual reminder group

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP