Do’s and Don’ts on Fridays and Tuesdays

நாம் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் மறந்தும் செய்யக்கூடாத செயல்கள் 

ஏன் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் கடன் கொடுக்கக் கூடாது என்று கூறுகிறார்கள்.

செல்வத்தை அதிகரிக்க அந்நாளில் நாம் என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம் .

ஏன் செவ்வாய்,வெள்ளிக்கிழமைகளில் பணம் கொடுக்க கூடாது ?

 

இந்த இரண்டு நாட்களும் அதாவது செவ்வாய்- முருகனுக்கும் வெள்ளி- லட்சுமிக்கும் உகந்தவை எனவே நாம் வணங்கும் இந்த இரண்டு தெய்வங்களும் நமக்கு செல்வ வளத்தை கொடுப்பதுடன் அவர்கள் நமது வீட்டில் நிரந்தரமாக இருப்பதற்கும் அருள் புரிகிறார்கள்.

எனவே நாம் அன்றைய தினம் பணப்பெட்டியில் இருந்து பணத்தை எடுத்து செலவு செய்வதையும் மற்றவர்களுக்கு வழங்குவதையும் தவிர்க்க வேண்டும்.

ஏனெனில் நம்மிடம் இருக்கும் அணைத்து செல்வ வளங்களும் நம்மை விட்டு விலகி விடும் என்பது ஐதீகமாகும்.

Goddess Mahalakshmi

நாம் செவ்வாய், வெள்ளி கிழமையில் செய்ய வேண்டியவை?

5 முகம் கொண்ட குத்து விளக்கை செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்  ஏற்றி திருமகளை வழிபடலாம்.

பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை 4- 5 மணி நேரத்தில் படுக்கையை விட்டு எழுந்திருக்க வேண்டும்.

வெள்ளை புறாக்கள் வளர்த்தால் எப்பொழுதும் செல்வம் நம் வீட்டில் நிலைத்து இருக்கும் .

நம் வீடுகளில்  செல்வத்தை அதிகரிக்க சங்கு, நெல்லிக்காய், பசுவின் சாணம் மற்றும் ஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் ஆகியவற்றை வீட்டில் வைத்திருக்க வேண்டும்.

 

செய்யக் கூடாதவை எவை?

நாம் பணம் கொடுக்க வேண்டும் என்றால் வாசல் படியில் நின்று கொடுக்காமல், இருவரும் வாசல் படிக்கு உள்ளே அல்லது கீழே இறங்கி வாங்க வேண்டும்.

குத்து விளக்கை ஊதியும் அணைக்கக் கூடாது, தானாகவும் அணையவிடக்  கூடாது. பூக்களை கொண்டு அணைக்க வேண்டும்.
நம் வீட்டில் உள்ள வாசற்படி, அம்மி, ஆட்டுக்கல், உரல் ஆகியவைகளில் உட்காரக் கூடாது.

இரவில் வீட்டில் பெருக்கும் குப்பைகளை வெளியே கொட்டக் கூடாது.

விளக்கு வீட்டில் ஏற்றிய பின்  பால், தயிர், உப்பு, ஊசி ஆகிய பொருட்களை மற்றவர்களுக்கு கொடுக்கக் கூடாது.

ஈரத்துணியை உடுத்திக்கொண்டு வீட்டில் சாமிக்கு பூஜை செய்யக் கூடாது.

விளக்கேற்றுவதால் விளையும் நன்மைகள் 

விளக்கேற்றுவதற்கு உகந்த எண்ணெய்கள் மற்றும் அவைகளின் நன்மைகள் 

– Bhuvana

By

Reach us to be a part of our whatsapp spiritual reminder group

2 Comments on “Do’s and Don’ts on Fridays and Tuesdays

  • Very nice. Please add as many information as possible. Would be very good if detailed information be added like the way of performing rituals, food culture and dress culture.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP