Did you Know ? Why do we offer bangles to the Goddess on Adipuram!

இன்று(26.7.17) ஆடிப்பூரம். நாம் ஏன் இன்று ஆடிப்பூரத்தை அம்மனுக்கு வளையல்களல் அணிந்து கொண்டாடுகிறோம் என்று கீழுள்ளவற்றுள் காணலாம்.
பூரம் நட்சத்திரம் ஆடி மாதத்தில்தான் அம்மன் தோன்றினாள். பல வண்ண கலர்களில்
பெண்களுக்கு வளையல்கள் அணிந்து பார்க்க ஆசைப்படுவார்கள். அம்மனும் ஒரு
பெண்தானே அவளுக்கும் ஆசை இருக்காதா? சக்திதேவி அவள் ஆசையை எவ்வாறு
நிறைவுபடுத்துக்கொண்டாள் தெரியுமா?

adipuram

வளையல் வியாபாரி ஒருவர்,ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வளையல்களை விற்க வருவது அவரின் வழக்கம். அந்த வியாபாரி ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கொண்டுவந்த வளையல்களில் ஒரு பாதியைவிற்றுவிட்டார் மீதியை மறுநாள் விற்றுக்கொள்ளலாம்  என்று நினைத்தார். அவருக்கு பெரியபாளையம் வரும்பொழுது மிகுந்த சோர்வுஅடைந்தார்.

ஆகவே அவர் அருகில் இருந்த வேப்பமரத்தடியில் வளையல்களை வைத்துவிட்டு அங்கேயே
தூங்கிவிட்டார். சில மணித்துளிகள் கழித்து எழுந்து பார்த்தார் அருகில்
இருந்த வளையல்களை காணவில்லை பதறியடித்து எழுந்து சுற்றுமுற்றும் தேடினார்.
வளையல்கள் கிடைக்கவில்லை மிகுந்த வருத்தத்துடன் ஆந்திராவிற்கு சென்றுவிட்டார்.

அன்று அந்த வலயல்வியாபாரி கனவில் “ரேணுகா பாவானி” தோன்றி உன்வளையல்ககளை என்
கையில் அலங்கரித்துஉள்ளது பார். மகிழ்ச்சியுடன் நான் உனக்கு வரங்கள்
அளிக்கிறேன். பல காலமாக பெரியபாளையம் வேப்பமரத்தில் வீழ்ற்றியிருக்கும்
என்னை வணங்குபவர் வாழ்க்கை செழிக்கும் என்று கூறினால் அம்பாள்.

அந்த வளையல் வியாபாரி தான் கண்ட கனவை அவர் நண்பர்களிடமும், உறவினரிடம்
கூறினார். பின்பு சென்னைக்கு அவர்களை அழைத்து வந்து பெரியபாளையம் மக்களிடம்
தான் கண்ட கனவை பற்றி கூறினார். பின்பு பெரியபாளையத்தில் சுயம்புவாக
தோன்றிய அம்மனுக்கு கோவில் கட்டி வழிபட்டனர்.

(ரேணுகா பாவானி)அவள் அணிந்த வளையலை நாம் அணிந்தால் குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். குழந்தைப்பேறுயில்லாதவருக்கு குழந்தை பாக்கியம் , மணமாகாதவருக்கு விரைவில்
திருமணம் ஆகும். அவள் மனம் மகிழ்ந்தாள்  உலகமே மகிழ்ச்சி அடையும்.

ரேணுகா பாவானி தோன்றிய தினம் தான் ஆடிப்பூரம். அம்மனின் தரிசித்து பூமாலை, அவளுக்கு அணியும் வளையல்கள் நாம் அணியலாம். ஆண்கள் அம்மனுக்கு சாற்றிய மலரை அவர்கள் சட்டை பாக்கெட்டில் வைத்தால் வெற்றி பெறுவர் அனைத்தும் சுபகாரியங்களும்  கைகூடும்.

By

Reach us to be a part of our whatsapp spiritual reminder group

About the author

View all articles by Bhuvana

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP