Did you know? The different types of Abhishekam

எல்லா கோவில்களிலும் அபிஷேகம் செய்வது வழக்கம். ஆனால் வித்யாசமான அபிஷேகம் சில கோவில்களில் செய்யப்படுகிறது.

Sri-kalahasti-palabhishekam-copy

1. திருக்குற்றாலநாதருக்கு மூலிகை வேர்கள், மூலிகை இலைகள் ஆகியவற்றை அரைத்துக் காய்ச்சி தயாரிக்கப்படும் தைலத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது.

2. கேரளமாநிலம் கொடுங்கல்லூர் பகவதி அம்மனுக்கு பால், தயிர் இவற்றுடன் தவிடு அபிஷேகமும் செய்யப்படுகிறது.

3. திருவலஞ்சுழி விநாயகருக்கு பச்சை கற்பூரம் அபிஷேகம் செய்யப்படுகிறது .

4. காரைக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பெருவிழா நாளில் தக்காளிச்சாறு அபிஷேகம் செய்யப்படுகிறது.

5. சென்னை குரோம்பேட்டை கணபதிபுரம் செங்கசேரி அம்மன் கோவிலில் மருதாணி இலைகளால் அபிஷேகம் செய்கின்றனர்.

6. திருவாரூர் மாவட்டம் பொன்னிறை எனும் ஊரில் அகத்தீஸ்வரருக்கு பங்குனி உத்திரதிருநாளில் நெல்லிப்பொடி அபிஷேகம் செய்கின்றனர்.

7. சோலைமலை முருகனுக்கு தினசரி அபிஷேகம் செய்ய கோயிலின் வடக்குப்புறமுள்ள முருகத் தீர்த்தம்தான் பயன்படுத்தப்படுகிறது. இந்த தீர்த்தம் விபூதிமேடு என்ற மலை இடுக்கிலிருந்து தொடர்ந்து எப்போதும் வற்றாமல் வந்து கொண்டிருக்கிறது.

8. திருவரங்கம் ரங்கநாத சுவாமிக்கு பண்டரிபுரம் விட்டலுக்கு வெந்நீர் அபிஷேகம் செய்யப்படுகிறது.

By

Reach us to be a part of our whatsapp spiritual reminder group

About the author

View all articles by Bhuvana

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP